/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
இடியும் நிலையில் வணிக வளாகம் இடித்து புதிய கடைகள் கட்ட எதிர்பார்ப்பு
/
இடியும் நிலையில் வணிக வளாகம் இடித்து புதிய கடைகள் கட்ட எதிர்பார்ப்பு
இடியும் நிலையில் வணிக வளாகம் இடித்து புதிய கடைகள் கட்ட எதிர்பார்ப்பு
இடியும் நிலையில் வணிக வளாகம் இடித்து புதிய கடைகள் கட்ட எதிர்பார்ப்பு
ADDED : ஆக 25, 2024 04:08 AM

காரியாபட்டி: காரியாபட்டி பஸ் ஸ்டாண்ட் அருகே வணிக வளாக கடைகள் சேதமடைந்து இடியும் நிலையில் உள்ளதால் அப்புறப்படுத்தி புதிய கடைகள் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
காரியாபட்டி பேரூராட்சிக்கு வருவாய் ஈட்ட பஸ் ஸ்டாண்ட் அருகே 50-க்கும் மேற்பட்ட வணிக வளாக கடைகள் கட்டப்பட்டன. 20 ஆண்டுகளுக்கு மேல் ஆனதால் கட்டடங்கள் சேதமடைந்தன. பெரும்பாலானவர்கள் கட்டடங்களை பயன்படுத்த முடியாமல் பூட்டு போட்டனர். ஒரு சிலர் வேறு வழி இன்றி கடைகளை பயன்படுத்தி வருகின்றனர்.
மேற்கூரை சேதமடைந்து அவ்வப்போது இடிந்து விழுகிறது. எப்போது விழுமோ என்கிற சூழ்நிலையில் கடை உரிமையாளர்கள் தவித்து வருகின்றனர்.
இது ஒரு புறம் இருக்க, பயன்பாடு இன்றி கிடக்கும் கடைகளில் மது அருந்துதல், திறந்த வெளி கழிப்பிடமாக பயன்படுத்தி வருகின்றனர்.
அப்பகுதியில் பெண்கள் நடந்து செல்ல முடியவில்லை. துர்நாற்றம் வீசுவதால் அருகில் உள்ள கடைக்காரர்கள் வாடிக்கையாளர்கள் கப் தாங்க முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.
மழை நேரங்களில் தண்ணீர் தேங்கி, சேரும் சகதியமாக இருக்கிறது. தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. ஆக்கிரமிப்பு போன்ற பல்வேறு பிரச்னைகளால் மக்கள் சென்று வர முடியவில்லை. தொடர்ந்து மழை பெய்தால் கட்டடம் சேதம் அடைந்து இடிந்து விழும் ஆபத்து உள்ளது. பழைய கட்டடங்களை அப்புறப்படுத்தி நவீன முறையில் புதிய வணிகவளாக கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.