/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பள்ளி திட்டத்தின் நிதி பங்களிப்பு வழங்க எதிர்பார்ப்பு
/
பள்ளி திட்டத்தின் நிதி பங்களிப்பு வழங்க எதிர்பார்ப்பு
பள்ளி திட்டத்தின் நிதி பங்களிப்பு வழங்க எதிர்பார்ப்பு
பள்ளி திட்டத்தின் நிதி பங்களிப்பு வழங்க எதிர்பார்ப்பு
ADDED : செப் 06, 2024 04:38 AM
விருதுநகர்: கலெக்டர் ஜெயசீலன் செய்திக்குறிப்பு: அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்துவதற்காகவும், சமூக பங்களிப்பு, தனிப்பட்ட பங்களிப்புகளை ஒருங்கிணைக்கவும் 'நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி' என்ற திட்டம் துவங்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் மூலம் மக்கள் தங்களது பங்களிப்புகளை பொருளாகவோ பணமாகவோ அல்லது களப்பணி செய்வதன் மூலமாகவோ பங்களிக்கலாம். இத்திட்டத்தின் வாயிலாக குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள், பெரு நிறுவனங்கள், அரசு சாரா தொண்டு நிறுவனங்கள், முன்னாள் மாணவர்கள், தனிநபர்கள் அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்த பங்களிக்கலாம்.
நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி https://nammaschool.tnschools.gov.in என்ற தளத்தின் வாயிலாக மாநிலம் முழுவதும் உள்ள தங்களுக்கு விருப்பமான அரசு பள்ளியை தேர்ந்தெடுத்து, அப்பள்ளியின் தேவைகளை பூர்த்தி செய்யலாம். இத்திட்டத்தின் செயல்பாடுகள் கலெக்டரால் கண்காணிக்கப்படும். 63853 13047 என்ற எண்ணின் வாயிலாக நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி குழுவை தொடர்பு கொள்ளலாம், என்றார்.