/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மான்கள் சரணாலயம் அமைக்க எதிர்பார்ப்பு
/
மான்கள் சரணாலயம் அமைக்க எதிர்பார்ப்பு
ADDED : செப் 01, 2024 11:52 PM
சிவகாசி : சிவகாசி அருகே வெற்றிலையூரணி ஆனை கூட்டம் பகுதியில் அதிகமான மான்கள் நடமாடுவதால் இங்கு மான்கள் சரணாலயம் அமைக்க வேண்டும் என வன விலங்கு ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.
சிவகாசி அருகே வெற்றிலையூரணி ஆனைக்கூட்டம் பகுதியில் சோளம், பருத்தி உள்ளிட்ட பயிர்களை விவசாயிகள் பயிரிடுகின்றனர். தவிர இப்பகுதியில் உள்ள கண்மாய்களில் தண்ணீர் ஆதாரமும் உள்ளது.
இதனால் இப்பகுதியில் அதிகமான மான்கள் உணவிற்காக வசிக்கின்றன. இவைகள் அவ்வப்போது உணவைத் தேடி வெளியில் வரும்போது ரோட்டில் வாகனங்களால் அடிபட நேரிடுகின்றது.
மேலும் ஊருக்குள் வரும்போது தெருநாய்களால் கடிக்கப்பட்டு இறக்க நேரிடுகின்றது.
தவிர தெரியாமல் கிணறுகளில் விழுந்தும் பாதிக்கப்படுகின்றது. கடந்த காலங்களில் இது போன்ற சம்பவங்களால் பலமுறை மான்கள் இறந்துள்ளது.
அடிக்கடி இது போன்ற சம்பவம் நிகழ்வதால் மான்களின் எண்ணிக்கை குறைந்து வருகின்றது. எனவே இப்பகுதியில் மான்கள் சரணாலயம் அமைக்க வேண்டும் என வனவிலங்கு ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.