/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
கனரக வாகனங்களால் எளிதில் சிதிலமடையும் ரோடு தரம் வாய்ந்ததாக அமைக்க எதிர்பார்ப்பு
/
கனரக வாகனங்களால் எளிதில் சிதிலமடையும் ரோடு தரம் வாய்ந்ததாக அமைக்க எதிர்பார்ப்பு
கனரக வாகனங்களால் எளிதில் சிதிலமடையும் ரோடு தரம் வாய்ந்ததாக அமைக்க எதிர்பார்ப்பு
கனரக வாகனங்களால் எளிதில் சிதிலமடையும் ரோடு தரம் வாய்ந்ததாக அமைக்க எதிர்பார்ப்பு
ADDED : மே 09, 2024 05:02 AM

விருதுநகர்: விருதுநகர் படேல் ரோட்டில் நுகர் பொருள் வாணிப கழக கோடவுன் இருப்பதாலும், மில்கள் இருப்பதாலும் அதிகளவில் கனரக வாகனங்கள் வந்து செல்கின்றன. இந்த ரோட்டை தரம் வாய்ந்ததாக அமைத்து சேதத்தை தவிர்க்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விருதுநகர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை பின்புறம் படேல் ரோடு உள்ளது. இங்கு நுகர்பொருள் வாணிப கழக கோடவுன் உள்ளது. மேலும் மில்களும் இயங்குகின்றன. இதனால் தினசரி அதிகளவில் கனரக வாகனங்கள் வந்து செல்லும். அதிக எடையுள்ள கனரக வாகனங்கள் அடுத்தடுத்து அணிவகுப்பதால் அதன் ரோடுகள் எளிதில் சேதமடைந்து விடுகின்றன.
இந்த ரோடு ரயில்வே ஸ்டேஷனுக்கு செல்லும் ரோடு என்பதால் நகரின் கிழக்கு பகுதி மக்கள் அவசரத்திற்கு இந்த ரோட்டை தான் பயன்படுத்துகின்றனர். அதே போல் மின்வாரிய அலுவலகத்திற்கும் இந்த வழியை பயன்படுத்தி செல்ல முடியும். இந்த ரோடு ஆங்காங்கே பள்ளங்களால் சேதம் அடைந்துள்ளதால் மக்கள் கடும் சிரமத்தை சந்திக்கின்றனர்.
அப்பகுதி குடியிருப்போர் தொடர்ந்து சேதமடைந்த ரோட்டை சீரமைக்க நகராட்சியிடம் கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆனால் செவிசாய்க்கவில்லை. இந்நிலையில் அங்குள்ள மில்களிடம் இருந்து பணம் வசூலித்து ரோடு பேட்ஜ் பணி செய்தனர். அப்படியும் ஓரிரு மாதங்களில் மீண்டும் ரோடு சேதமடைந்து விட்டது. அணிவகுத்து நிற்கும் லாரிகளால் குடியிருப்போர் கடும் சிரமத்தை சந்திக்கின்றனர்.
இந்த பகுதியில் நகராட்சி நிர்வாகம் ரோடு போட்டால் கனரக வாகன எடையிலும் சேதம் அடையாத வகையில் தரமானதாக போட வேண்டும். தவறினால் போட்ட சில மாதங்களிலே ரோடு சேதமடைய வாய்ப்புள்ளது. நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.