/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
கூமாபட்டி பஸ்களை பிளவக்கல் அணை வரை தட நீட்டிப்பு செய்து இயக்க எதிர்பார்ப்பு
/
கூமாபட்டி பஸ்களை பிளவக்கல் அணை வரை தட நீட்டிப்பு செய்து இயக்க எதிர்பார்ப்பு
கூமாபட்டி பஸ்களை பிளவக்கல் அணை வரை தட நீட்டிப்பு செய்து இயக்க எதிர்பார்ப்பு
கூமாபட்டி பஸ்களை பிளவக்கல் அணை வரை தட நீட்டிப்பு செய்து இயக்க எதிர்பார்ப்பு
ADDED : ஆக 21, 2024 06:43 AM
வத்திராயிருப்பு : ஸ்ரீவில்லிபுத்துாரில் இருந்து கூமாபட்டி வரை இயங்கும் அனைத்து அரசு டவுன் பஸ்களையும் பிளவக்கல் அணை வரை தட நீட்டிப்பு செய்து இயக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
ஸ்ரீவில்லிபுத்துாரில் இருந்து பிளவக்கல் அணைக்கு தலா ஒரு தனியார் பஸ், டவுன் பஸ், புறநகர் பஸ்கள் இயங்கி வந்தது.
மேலும் விருதுநகரில் இருந்து எரிச்சநத்தம், அழகாபுரி வழியாகவும் ஒரு பஸ் இயக்கப்பட்டது.
ஆனால் கொரோனா ஊரடங்கு காலத்திற்கு பிறகு எந்தவித பஸ்களும் முறையாக இயங்கவில்லை. தனியார் பஸ்சும் தற்போது அணைக்கு செல்வதே இல்லை.
கூமாபட்டியில் நிறுத்தப்படுகிறது. விருதுநகரில் இருந்து வரும் பஸ்சும் இரவு ஹால்ட் செய்ய பிளவக்கல் அணைக்கு செல்வதில்லை.
ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து இயக்கப்படும் டவுன் பஸ்ஸும் அமாவாசை, பவுர்ணமி நாட்களில் தாணிப்பாறைக்கு இயக்கப்படுகிறது.
குற்றாலம் பஸ் மட்டுமே காலை, மதியம் 2 மணிக்கு புறப்பட்டு செல்கிறது.
தற்போது கூமாபட்டியில் இருந்து பிளவக்கல் அணை வரை, கொடிக்குளம், கிழவன் கோயில், பட்டுப்பூச்சி பகுதிகளில் குடியிருப்புகள் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில் போதிய பஸ்கள் இல்லாமல் அப்பகுதி மக்களும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
எனவே தற்போது ஸ்ரீவில்லிபுத்துாரில் இருந்து கூமாபட்டி வரை செல்லும் அனைத்து பஸ்களையும் பிளவக்கல் அணை வரை தடநீட்டிப்பு செய்து இயக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

