நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருச்சுழி : திருச்சுழி அருகே கல்லூரணியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன், 52, இவர் கருப்பசாமி கோயில் அருகே டீ கடை நடத்தி வருகிறார்.
இவரிடம் நேற்று முன்தினம் காலை 10:30 மணிக்கு அம்மன்பட்டியை சேர்ந்த மலைராஜ்,51, கையில் இரும்பு கம்பியுடன் கல்லாவில் இருந்த பணத்தை கேட்டு, மிரட்டி ரூ.1500 பறித்ததுடன், கண்ணாடி ஜாரை அடித்து உடைத்து விட்டு சென்றுள்ளார். எம் ரெட்டியபட்டி போலீசார் மலைராஜை கைது செய்து விசாரிக்கின்றனர்.-

