ADDED : ஆக 13, 2024 12:20 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அருப்புக்கோட்டை : மதுரை பாலமேடை சேர்ந்த விவசாயி கார்த்திக் ராஜன், 50, இவர், மதுரை வளையப்பட்டியை சேர்ந்த தனது உறவினர்கள் திலீபன்,30 , பஞ்சவர்ணம், 55, ஜெயக்குமார்,48, பிரபாகர்,33, மலையக்கா,60, நந்தகுமார்,28, ஆகியோருடன் காரில் திருச்செந்தூர் கோவிலுக்கு சென்று விட்டு ஊர் திரும்பி கொண்டிருந்தார்.
வலையபட்டியை சேர்ந்த ராம் கண்ணன், 24, காரை ஓட்டி வந்துள்ளார். பந்தல்குடி நான்கு வழி சாலையில் வந்து கொண்டிருந்தபோது கொப்புசித்தம்பட்டி விலக்கு அருகில் கார் நிலை தடுமாறி ரோட்டில் கவிழ்ந்தது. இதில் கார்த்திக்ராஜன் சம்பவ இடத்தில் பலியானார். மற்றவர்கள் லேசான காயம் அடைந்தனர். பந்தல்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.

