/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மக்காச்சோளம் அறுவடையில் காட்டுப்பன்றிகள் தாக்குதல்கள் விவசாயிகள் கவலை
/
மக்காச்சோளம் அறுவடையில் காட்டுப்பன்றிகள் தாக்குதல்கள் விவசாயிகள் கவலை
மக்காச்சோளம் அறுவடையில் காட்டுப்பன்றிகள் தாக்குதல்கள் விவசாயிகள் கவலை
மக்காச்சோளம் அறுவடையில் காட்டுப்பன்றிகள் தாக்குதல்கள் விவசாயிகள் கவலை
ADDED : மார் 05, 2025 05:58 AM
விருதுநகர்: விருதுநகர் அருகே பாவாலி, மீசலுார், அதனை சுற்றிய பகுதிகளில் மக்காச்சோளம் அறுவடை நடக்கிறது. அறுவடைக்கு தயாராக காய்ந்த நிலையில் உள்ள பயிர்களை காட்டுப்பன்றிகள் தாக்கி பாழாக்குவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
விருதுநகர் அருகே பாவாலி, மீசலுார், அழகாபுரி, தாதம்பட்டி சுற்றுவட்டாரங்களில் பல நுாறு ஏக்கரில் மக்காச்சோளம் பயிரிடப்பட்டுள்ளது. தற்போது அறுவடை துவங்கி நடந்து வருகிறது. இப்பகுதிகளில் பயிர்கள் பச்சையாக இருக்கும் போது காட்டுப்பன்றிகள் தாக்கி அழிப்பது வாடிக்கையான ஒன்றாக மாறிவிட்டது.
ஆனால் தற்போது அறுவடைக்கு தயாராக காய்ந்த நிலையில் பயிர்கள் உள்ளன. இவற்றை காட்டுப்பான்றிகள் முற்றிலும் சேதப்படுத்தி வருகின்றன. இப்பயிர்களை இரவு துவங்கி அதிகாலை வரை பன்றிகள் உண்டு பாழாக்குவதால் இரவு முழுவதும் விவசாயிகள் காவலுக்கு இருக்கும் நிலை உண்டாகியுள்ளது.
மேலும் வனத்துறை அலுவலர்களிடம் பன்றிகளை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல முறை தெரிவித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. விளைச்சல் குறைவாக இருந்தாலும் விலை இருப்பதால் செலவழித்த பணமாவது கையில் கிடைக்கும் என்று எண்ணிய விவசாயிகளுக்கு காட்டுப்பன்றிகளின் தாக்குதல்களால் கவலை அடைந்துள்ளனர்.
விவசாயி ஆதவன் வடிவேல் கூறியதாவது: காட்டுப்பன்றிகள் எப்போதும் பச்சையாக இருக்கும் பயிர்களை சேதப்படுத்தி சோளத்தை உண்டு செல்லும். ஆனால் தற்போது காய்ந்து அறுவடைக்கு தயாராக இருப்பவற்றை முற்றிலும் சேதப்படுத்தி உண்டு செல்கின்றன. சூழ்நிலைக்கு ஏற்ப பன்றிகள் தாக்குதல்களை மாற்றி விளை நிலங்களை பாழாக்கி வருகின்றன, என்றார்.