/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
விவசாய நிலங்களில் சாய்ந்த நிலையில் மின்கம்பங்கள் அச்சத்தில் சித்தமநாயக்கன்பட்டி விவசாயிகள்

ADDED : மே 05, 2024 05:50 AM

சிவகாசி, : சிவகாசி அருகே சித்தமநாயக்கன்பட்டியில் விவசாய நிலங்களில் சாய்ந்து விழும் நிலையில் உள்ள மின் கம்பங்களாலும், கைக்கு எட்டும் வகையில் தாழ்வாக சொல்லும் மின் வயர்களாலும் விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர்.
சிவகாசி அருகே சித்தமநாயக்கன்பட்டியில் விவசாய நிலங்களில் நெல், பருத்தி உள்ளிட்ட பயிர்கள் பயிரிடப்படுகின்றது. இந்த விவசாய நிலங்களில் வழியாக மோட்டார் பாசனத்திற்கான மின் வயர்கள், அருகிலுள்ள கிராமங்களுக்கு மின் வயர்கள் செல்கின்றது. இந்த வயர்கள் அனைத்துமே மிகவும் தாழ்வாக செல்கின்றது.
விவசாயப் பணிகள் மேற்கொள்ளும்போது சற்று கவனம் குறைவாக இருந்தாலும் கைக்கு எட்டும் உயரத்தில் உள்ள மின் வயரை தொட்டுவிட வாய்ப்புள்ளது.
ஒரு சில இடங்களில் பயிர்களை தொட்டுச் செல்லும் அளவிற்கு ஒயர்கள் தாழ்வாக செல்கின்றது.
மேலும் மின் கம்பங்களும் மிகவும் சாய்ந்த நிலையில் உள்ளது . சிறிய மழை பெய்தாலும் விழ வாய்ப்பு உள்ளது. இதனால் விவசாயிகள் அச்சத்துடனே வேலை செய்கின்றனர். எனவே இப்பகுதியில் தாழ்வாகச் செல்லும் மின் வயர்களை உயர்த்தி கட்ட வேண்டும், சாய்ந்த நிலையில் உள்ள மின்கம்பங்களை சரி செய்ய வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.