ADDED : செப் 10, 2024 04:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: மானாவாரி விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூ.20 ஆயிரம் வழங்குவது, 2 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள இன்சூரன்ஸ் தொகையை உடனடியாக வழங்குவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விருதுநகர் கலெக்டர் அலுவலகம் முன் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன், செயலாளர் சவுந்தரபாண்டியன் தலைமை வகித்தனர். இந்திய கம்யூ., தேசிய குழு உறுப்பினர் ராமசாமி, மாவட்ட செயலாளர் லிங்கம், நிர்வாக குழு உறுப்பினர்கள் அழகிரிசாமி, பொன்னுப்பாண்டியன் உட்பட பலர் பங்கேற்றனர்.