ADDED : ஜூன் 22, 2026 07:51 PM
அ நிறம் | அளவு
விருதுநகர்: தேங்காய்க்கு விலை நிர்ணயம் செய்ய வலியுறுத்தி விருதுநகர் கலெக்டர் அலுவலகம் முன் தமிழ்நாடு தென்னை விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்டத் தலைவர் காளிதாசன் தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் அமல்ராஜ் முன்னிலை வகித்தார். மாநில தலைவர் விஜய முருகன் பேசினார். இதில் தேங்காய் ஒரு கிலோ ரூ.60, உரிக்காத தேங்காய் கிலோ ரூ.30, கொப்பரை தேங்காய் கிலோ ஒன்றுக்கு ரூ.180 என விலை நிர்ணயம் செய்வது, தென்னையைத் தாக்கும் நோய்களை கட்டுப்படுத்த அரசு உதவுவது, தேங்காய், தேங்காய் எண்ணெயை அரசே கொள்முதல் செய்து ரேஷன் கடைகளின் மூலம் மக்களுக்கு வழங்குவது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் முருகன் உள்ளிட்ட திரளான தென்னை விவசாயிகள் பங்கேற்றனர்.
