/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
வனவிலங்குகளை கட்டுப்படுத்த விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
/
வனவிலங்குகளை கட்டுப்படுத்த விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
வனவிலங்குகளை கட்டுப்படுத்த விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
வனவிலங்குகளை கட்டுப்படுத்த விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூன் 22, 2024 04:45 AM
சேத்துார்: சேத்துார் வட்டார விளை நிலங்களில் வனவிலங்குகளால் ஏற்படும் பாதிப்பை தடுக்க கோரி தமிழக அரசு, வனத்துறையை கண்டித்து விவசாயிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
தென்னை விவசாயிகள் சங்க தலைவர் சீதாராமன் தலைமை வகித்தார்.
தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் அம்மையப்பன், தென்னை விவசாயிகள் சங்க மாவட்ட குழு தங்கவேல் முன்னிலை வகித்தனர்.
மாநில செயலாளர் விஜய முருகன் உள்ளிட்ட நிர்வாகிகள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.
இதில் வன விலங்குகளான யானை, காட்டெருமை, பன்றி ,கரடி ஆகிய வனவிலங்குகளை விவசாய நிலங்களுக்குள் வருவதை தடுத்து நிறுத்தவும், 10 ஆண்டுகளுக்கு முன் தோண்டிய அகழியை துார்வாரி ஆழப்படுத்தவும், விடுபட்ட இடங்களில் மின் அதிர்வு வேலி அமைத்து, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.