/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பெண் ஆட்டோ ஓட்டுநருக்கு ரூ. 1 லட்சம் மானியம்
/
பெண் ஆட்டோ ஓட்டுநருக்கு ரூ. 1 லட்சம் மானியம்
ADDED : ஆக 23, 2024 03:35 AM
விருதுநகர்: தொழிலாளர் உதவி ஆணையர் காளிதாஸ் செய்திக்குறிப்பு: விருதுநகர் மாவட்டத்தில் பெண் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு ரூ. 1 லட்சம் மானியமாக வழங்கும் திட்டத்தில் அமைப்புசாரா ஓட்டுநர் நலவாரியத்தில் பதிவு செய்யவும், வீட்டுப் பணியாளர்கள் நலவாரியத்தில் பதிவு செய்யாதவர்கள் உறுப்பினர்களாக பதிவு செய்ய www.tnuwwb.tn.gov.in என்ற இணைய தளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
இதில் பதிவு செய்ய வீட்டுப்பணியாளர்கள், பெண் ஆட்டோ ஓட்டுநர்களின் ஆதார் எண், குடும்ப அட்டை, ஓட்டுநர் உரிமம், தேசிய மயமாக்கப்பட்ட வங்கி கணக்கு, பள்ளி மாற்றுச் சான்றிதழ் ஆகியவற்றின் அசல் ஆவணங்களுடன் விருதுநகர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) அலுவலகத்திற்கு நேரில் வர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.