/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பட்டாசு ஆலை குடோனில் தீ விபத்து
/
பட்டாசு ஆலை குடோனில் தீ விபத்து
ADDED : மார் 05, 2025 06:10 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகாசி: சிவகாசி அருகே பட்டாசு ஆலை குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் கேப் வெடி அட்டை பெட்டிகள் தீயில் எரிந்து சேதமடைந்தது.
சிவகாசியை சேர்ந்த ரவீந்திரன் என்பவர் ஜமீன்சல்வார்பட்டியில் கேப் வெடிகள் உற்பத்தி செய்யும் பட்டாசு ஆலை நடத்தி வருகிறார். இந்த பட்டாசு ஆலையில் நேற்று மதியம் உணவு இடைவேளையின் போது குடோனில் தீ விபத்து ஏற்பட்டது. சிவகாசி தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர்.
இதில் குடோனில் இருந்த கேப் வெடிகள், அட்டை பெட்டிகள் சேதமடைந்தது. உணவு இடைவேளையின் போது தீ விபத்து ஏற்பட்டதால் அசம்பாவிதம் ஏதும் ஏற்படவில்லை. கிழக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.