ADDED : ஜூலை 24, 2026 08:22 PM
அ நிறம் | அளவு
ராஜபாளையம், ஜூலை 25-
ராஜபாளையம் மலையடிப்பட்டியை சேர்ந்தவர் அமல்ராஜ் 35, டி.பி மில்ஸ் ரோட்டில் போட்டோ ஸ்டுடியோ வைத்துள்ளார். நேற்று இரவு 7:00 மணிக்கு ஊழியர்கள் கடையை பூட்டி அருகே இருந்த டீ கடைக்கு சென்றுள்ளனர். அப்போது ஸ்டுடியோவில் இருந்த பொருள்கள் தீ பற்றி எரிந்தது . தீயணைப்பு நிலைய அலுவலர் முத்துச்செல்வம் தலைமையிலான வீரர்கள் தீயை அணைத்தனர்.
இதில் கடையில் இருந்த ஜெராக்ஸ், கேமரா, கிப்ட் பொருட்கள் எரிந்து சேதமாகின. விபத்து காரணமாக டி.பி மில்ஸ் மெயின் ரோட்டில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
