ADDED : ஜூலை 25, 2024 03:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் நேற்று இரவு காட்டுத் தீ பிடித்து எரிந்தது.
கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக மழை பெய்யாததால் மேற்கு தொடர்ச்சி மலை பகுதி வறண்டும்,  ஓடைகளில் நீர்வரத்து இல்லாத நிலை  காணப்படுகிறது. பிளவக்கல் பெரியாறு,  கோவிலாறு அணைகளில் தண்ணீர்  வெகுவாக குறைந்துள்ளது.
கடந்த ஒரு வாரமாக வெயிலின் தாக்கம் மிகவும்அதிகமாக காணப்பட்ட நிலையில் நேற்று இரவு 7:00 மணி அளவில் வத்திராயிருப்பு கோட்ட மலையான் கோயில் வனப்பகுதியில், மூன்று இடங்களில்  காட்டுத்தீ பற்றி எரிந்தது.  காட்டுத் தீயை அணைக்கும் பணியில் வனச்சரகர் பிரபாகர்  குழுவினர்  ஈடுபட்டனர்.

