/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
நிரந்தர கடைகளுக்கு 5 ஆண்டுகளுக்கு உரிமத்தை புதுப்பித்து வழங்க வேண்டும் பட்டாசு வணிகர்கள் மாநாட்டில் தீர்மானம்

ADDED : ஆக 19, 2024 12:51 AM
சிவகாசி : நிரந்தர பட்டாசு விற்பனை கடைகளுக்கான உரிமத்தை 5 ஆண்டுகளுக்கு புதுப்பித்து வழங்க வேண்டும் என பட்டாசு வணிகர்கள் கூட்டமைப்பு மாநில மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சிவகாசியில் தமிழ்நாடு பட்டாசு வணிகர்கள் கூட்டமைப்பு சார்பில் 4 வது மாநில மாநாடு நடந்தது. மாநில தலைவர் ராஜா சந்திரசேகரன் தலைமை விகித்தார். பொது செயலாளர் இளங்கோவன், பொருளாளர் கந்தசாமி ராஜன் முன்னிலை வகித்தனர். பட்டாசு தொழில் பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம், மாநில செயற்குழு கூட்டம் மற்றும் மாநாடு நடந்தது. மாநாட்டு மலரை டான்பாமா தலைவர் கணேசன் வெளியிட்டார்.
மாநாட்டில் பட்டாசு கடைகளுக்கான உரிமத்தை புதுப்பிக்க ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதத்தில் விண்ணப்பித்தால் அக்., மாதத்தில் தான் உரிமம் வழங்கப்படுவதால் வர்த்தகம் பாதிக்கப்படுகிறது.
விண்ணப்பித்த 90 நாட்களுக்குள் உரிமம் வழங்க வேண்டும். நிரந்தர பட்டாசு விற்பனை கடைகளுக்கு 5 ஆண்டுகளுக்கு உரிமம் வழங்க வெடிபொருள் சட்டத்தில் வழி உள்ள நிலையில், 1 அல்லது 2 ஆண்டுகளுக்கு மட்டுமே உரிமம் வழங்கப்படுகிறது. பட்டாசு கடைகளுக்கு 5 ஆண்டுகளுக்கு உரிமம் வழங்க வேண்டும். தற்காலிக கடைகளுக்கான உரிமத்தை தீபாவளிக்கு 30 நாட்களுக்கு முன்னர் வழங்க வேண்டும் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இதில் பட்டாசு வணிகர்கள் கூட்டமைப்பு நிர்வாகிகள், உறுப்பினர்கள், பட்டாசு உற்பத்தியாளர்கள், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்த ஆயிரத்திற்கும் அதிகமான பட்டாசு விற்பனையாளர்கள் கலந்து கொண்டனர்.