/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சிவகாசியில் பறிமுதல் செய்யப்பட்ட பட்டாசு நீதிமன்ற உத்தரவுபடி அழிப்பு

ADDED : ஆக 24, 2024 03:28 AM

சிவகாசி: சிவகாசி அருகே திருத்தங்கலில் சட்டவிரோதமாக பதுக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்ட பட்டாசுகள் நீதிமன்ற உத்தரவு படி அழிக்கப்பட்டது.
சிவகாசி அருகே திருத்தங்கல் பெரியார் காலனியில் வருவாய் துறை, மற்றும் போலீசார் ஒரு மாதத்திற்கு முன்பு ஆய்வு செய்த போது திருத்தங்கல் பகுதியைச் சேர்ந்த தலித் ராஜா, பால்பாண்டி ஆகியோரின் குடோன்களில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரிக்கப்பட்டு பதுக்கி வைக்கப்பட்டிருந்தது. இதனை போலீசார், வருவாய்த் துறையினர் பறிமுதல் செய்திருந்தனர்.
இவற்றை நீதிமன்ற உத்தரவின் பேரில் நேற்று அழிப்பதற்கு முடிவு செய்யப்பட்டது.
அதன்படி மதுரை வெடிகுண்டு செயலிழப்பு இன்ஸ்பெக்டர் ராமசாமி, சிவகாசி இன்ஸ்பெக்டர் சந்திரன், வி.ஏ.ஓ., பாலமுருகன் முன்னிலையில் செங்கமலப்பட்டி கண்மாய் பகுதியில் பட்டாசுகளை குழியில் போட்டு தண்ணீர் ஊற்றியும், வெடி மருந்துகளை தீ வைத்தும் அழிக்கப்பட்டது.