ADDED : செப் 18, 2024 04:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராஜபாளையம் : ராஜபாளையம் ராம்கோ இன்ஸ்டிட்யூட் ஆப் டெக்னாலஜி பொறியியல் கல்லுாரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான துவக்க விழா நடந்தது. சிகரத்தை நோக்கி என்ற தலைப்பில் புலவர் ராமலிங்கம் பேசினார். துணை முதல்வர் ராஜ கருணாகரன் வரவேற்றார்.
முதல்வர் கணேசன் விருந்தினரை கவுரவித்தார்.பொது மேலாளர் செல்வராஜ், துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள்,மாணவர்கள், பெற்றோர் பங்கேற்றனர். கணினி அறிவியல் துறை தலைவர் விஜயலட்சுமி நன்றி கூறினார்.