நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர் : விருதுநகர் செந்திக்குமார நாடார் கல்லுாரியில் ஐம்பெரும் விழா நடந்தது. இதில் எம்.எஸ்., பெரியசாமி நாடார் சிலை, வங்கி ஏ.டி.எம்., விடுதியில் புதுப்பிக்கப்பட்ட உணவுக்கூடம் திறத்தல், கல்லுாரி 75வது பவள விழா ஆண்டு மலர் வெளியீடு, பட்டிமன்றம் நடந்தது.
இதில் கல்லுாரி தலைவர் பழனிசாமி, உப தலைவர்கள் ராஜ்மோகன், ரம்யா, செயலாளர் சர்ப்பராஜன், பொருளாளர் சக்திபாபு, கல்லுாரி முதல்வர் சாரதி உள்பட பலர் பங்கேற்றனர்.