/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பூக்குழி திருவிழா ஆலோசனை கூட்டம்
/
பூக்குழி திருவிழா ஆலோசனை கூட்டம்
ADDED : மார் 01, 2025 04:15 AM
ஸ்ரீவில்லிபுத்துார் : ஸ்ரீவில்லிபுத்துார் பெரிய மாரியம்மன் கோயிலில் பூக்குழி திருவிழா மார்ச் 18ல் கொடியேற்றத்துடன் துவங்குகிறது. மார்ச் 29ல் பூக்குழி, 30ல் தேரோட்டம் நடக்கிறது.
இதனை முன்னிட்டு நேற்று காலை கோயில் வளாகத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது. தாசில்தார் பாலமுருகன் தலைமை வகித்தார்.
டி.எஸ்.பி. ராஜா முன்னிலை வகித்தார். செயல் அலுவலர் ஜோதிலட்சுமி வரவேற்றார்.
நகராட்சி, மின்சாரம், தீயணைப்பு துறை உட்பட பல்வேறு அரசு துறை அதிகாரிகள், மண்டகப்படிதாரர்கள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் வழக்கம் போல் திருவிழாவை சிறப்பாக நடத்துவது, தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்வது, கோவில் நிர்வாகத்தின் சார்பில் செய்யப்பட வேண்டிய அடிப்படை வசதிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.