/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பறக்கும் படையினர் ரூ.3.33லட்சம் பறிமுதல்
/
பறக்கும் படையினர் ரூ.3.33லட்சம் பறிமுதல்
ADDED : ஏப் 11, 2024 06:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராஜபாளையம் : ராஜபாளையத்தில் தேர்தல் பறக்கும் படை அலுவலர் பங்கஜம் தலைமையிலான குழுவினர் ரூ3.33 லட்சம் பறிமுதல் செய்தனர்.
சேத்துார் அடுத்த அசையாமணி விலக்கு பகுதியில் வாகன சோதனையின் போது சேத்துாரில் இருந்து டூவீலரில் வந்த மதிவாணனிடம் சோதனை செய்ததில்ரூ. 1.95 லட்சம் உரிய ஆவணங்கள் இல்லாததால் பறிமுதல் செய்தனர்.
* ராஜபாளையம் ஒருங்கிணைந்த நீதிமன்றம் அருகே டூ வீலரில் வந்த முத்துகிருஷ்ணனிடம் சோதனையில் ரூ.1.38 லட்சம் என இருவரிடமும் மொத்தம் ரூ.3.33 லட்சம் பறிமுதல் செய்து தாசில்தார் ஜெயபாண்டியிடம் ஒப்படைத்தனர்.

