/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
விருதுநகரில் நுரை குடிநீர் மக்கள் அச்சம்
/
விருதுநகரில் நுரை குடிநீர் மக்கள் அச்சம்
ADDED : ஆக 29, 2024 04:55 AM

விருதுநகர்: விருதுநகர் நகராட்சியில் வினியோகம் ஆகும் குடிநீரில் நுரை வருவதால் மக்கள் அச்சப்படுகின்றனர்.
விருதுநகர் நகராட்சி 6வது வார்டு இந்திரா நகரில் நேற்று முன்தினம் இரவில் வினியோகம் செய்யப்பட்ட நகராட்சி குடிநீர் நுரை பொங்கி வந்தது. இதையடுத்து அப்பகுதி மக்கள் அந்த குடிநீரை பயன்படுத்த அச்சப்பட்டனர்.
விருதுநகரில் தாமிரபரணி குடிநீர் திட்டம் மூலம் 20 முதல் 30 லட்சம் லிட்டரும், சிவகாசி ஆனைக்குட்டம் கிணறுகள் மூலம் 23 லட்சம் லிட்டர் வரையும் குடிநீர் பெறப்பட்டு வினியோகிக்கப்படுகிறது.
இந்நிலையில் குடிநீரில் உவர்ப்பு சுவை இன்று வரை குறையாமல் உள்ளதுபெரிய குற்றச்சாட்டாக உள்ளது. மேலும் நகராட்சியில் நுரை வரும் குடிநீர் சில பகுதிகளில் வினியோகம் ஆவது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் தொட்டியில் குளோரின் தேவையான அளவு கலக்கப்படுகிறதா என்ற சந்தேகமும் எழுந்துஉள்ளது.
பிட்டர் பணியிடம் காலியாக உள்ளதால் நகராட்சியில் குடிநீர் வினியோகத்தில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

