/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
தீவன அபிவிருத்தி: 225 ஏக்கர் இலக்கு நிர்ணயம்
/
தீவன அபிவிருத்தி: 225 ஏக்கர் இலக்கு நிர்ணயம்
ADDED : ஜூலை 05, 2024 11:01 PM
விருதுநகர்-மாவட்டத்தில் ஒருங்கிணைந்த தீவின அபிவிருத்தி திட்டத்தில் நடப்பாண்டு 225 ஏக்கர்இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தென்னை, பழத்தோட்டங்களில்0.5 ஏக்கர் முதல் 1.0 ஹெக்டேர் பரப்பில் சோளம், கம்பு நேப்பியர் ஒட்டுப்புல், பல்லாண்டு பயிர் வகைகள், தீவன புல் வகைகளில் ஏதேனும்ஒன்றை ஊடுபயிராக பயிரிட்டு மூன்று ஆண்டுகள் பராமரிக்க ஒரு ஏக்கருக்கு ரூ. 3 ஆயிரம், ஒரு ஹெக்டேருக்கு ரூ. 7500 வரை மானியமாக வழங்கப்படுகிறது.
இதில் சிறு, குறு விவசாயிகள், ஆதிதிராவிடர்,பழங்குடியினருக்கு முன்னுரிமை உண்டு. தங்கள் பகுதியில் உள்ள கால்நடை உதவி மருத்துவரிடம் விண்ணப்பத்தை பெற்று ஜூலை 20க்குள் பூர்த்தி செய்து சமர்பிக்க வேண்டும். இந்த திட்டத்தில் முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் பயனாளிகள் தேர்வு செய்யப்படுவர் என கலெக்டர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.