நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வத்திராயிருப்பு : வத்திராயிருப்பு ரங்கா ராவ் லயன்ஸ் பெண்கள் மெட்ரிக் பள்ளியில் உணவு திருவிழா நடந்தது.
பள்ளி தலைவர் சுந்தரராஜ பெருமாள் தலைமை வகித்தார். தாளாளர் விஜயகுமார், செயலாளர் டாக்டர் பால்ச்சாமி முன்னிலை வகித்தனர். மாணவிகளின் பெற்றோர் தயாரித்த உணவுப் பொருட்களை சமர்ப்பித்தனர்.
அதில் சிறந்த மூன்று உணவுகள் தேர்ந்தெடுக்கப்பட்டது. பின் மாணவிகளின் பெற்றோருக்கு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகளை பள்ளி முதல்வர் ராஜேஸ்வரி வழங்கினார்.