ADDED : ஆக 19, 2024 12:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை எஸ்.பி.கே. கல்லூரியில் உணவு பாதுகாப்பு துறை கல்லூரி என்.எஸ்.எஸ்., திட்டம் இணைந்து உணவு பாதுகாப்பு விழிப்புணர்வு நடத்தியது. அருப்புக்கோட்டை நாடார்கள் உறவின்முறை தலைவர் சுதாகர் ஆலோசனை வழங்கினார்.
கல்லூரி செயலர் சங்கரசேகரன் தலைமை வகித்தார். தலைவர் மயில்ராஜன், முதல்வர் செல்லத்தாய் முன்னிலை வகித்தனர். திட்ட அலுவலர் அனிதா வரவேற்றார். உணவு பாதுகாப்பு நிபுணர் கணேஷ்குமார் கலப்படம் இல்லாத உணவுகளை எவ்வாறு கண்டுபிடிப்பது குறித்து செயல்முறை விளக்கம் அளித்தார். திட்ட அலுவலர் காசிமாயன் நன்றி கூறினார்.