/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
வாறுகால் பிரச்னை; 6 பேர் மீது வழக்கு
/
வாறுகால் பிரச்னை; 6 பேர் மீது வழக்கு
ADDED : ஆக 09, 2024 12:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகாசி: சிவகாசி கிளியம்பட்டி தெற்கு தெருவை சேர்ந்தவர் அந்தோணியம்மாள் 58. இவருக்கும் அருகில் குடியிருக்கும் மகேஸ்வரியின் குடும்பத்தினருக்கும் இடையே வாறுகால் பிரச்னையில் முன்பகை இருந்தது.
இதில் ஏற்பட்ட தகராறில் மகேஸ்வரி, கருப்பையா, சைலா மேரி ஆகியோர் அந்தோணியம்மாள் அவரது மகளை அடித்து கொலை மிரட்டல் விடுத்தனர். அந்தோணியம்மாள், லிங்கம்மாள், அய்யனார் ஆகியோர் மகேஸ்வரியை அடித்து கொலை மிரட்டல் விடுத்தனர். ஆறு பேர் மீதும் மாரனேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.-----