/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மூன்று மாதத்திற்கும் மேலாக குழாய் உடைந்து குடிநீர் வீண்
/
மூன்று மாதத்திற்கும் மேலாக குழாய் உடைந்து குடிநீர் வீண்
மூன்று மாதத்திற்கும் மேலாக குழாய் உடைந்து குடிநீர் வீண்
மூன்று மாதத்திற்கும் மேலாக குழாய் உடைந்து குடிநீர் வீண்
ADDED : மே 31, 2024 06:49 AM

சிவகாசி : சிவகாசி பி.எஸ்.ஆர்., ரோட்டில் மூன்று மாதத்திற்கும் மேலாக குழாய் உடைந்து ரோட்டில் ஓடும் குடிநீரால் மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.
சிவகாசி சேர்மன் சண்முகம் நாடார் ரோட்டில் உள்ள மேல்நிலை குடிநீர் தொட்டி மூலமாக நகர் முழுவதும் குடிநீர் வினியோகம் செய்யப்படுகின்றது. அதன்படி பி.எஸ்.ஆர். ரோடு வழியாக குழாய் பதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பி.எஸ்.ஆர். ரோட்டில் குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வினியோகம் செய்யும் போதெல்லாம் குடிநீர் ரோட்டில் வீணாக ஓடுகின்றது. மூன்று மாதத்திற்கு மேலாக குழாய் உடைந்து குடிநீர் வெளியேறி ஒடுவதால் ரோடும் சேதம் அடைந்து விட்டது.
பொதுவாகவே நகர் முழுவதும் எட்டு நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வினியோகம் செய்யப்படுகின்றது. கோடைகாலத்தில் தண்ணீர் தேவை அதிகரிக்கும். இதுபோல் அவ்வப்போது குழாய் உடைந்து குடிநீர் வீணாவதால் பற்றாக்குறை ஏற்பட்டு மக்கள் அதிருப்தியில் உள்ளனர். எனவே குழாய் உடைப்பினை சரி செய்து, சேதமடைந்த ரோட்டினையும் சீரமைக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.