விருதுநகர் : கலெக்டர் ஜெயசீலன் செய்திக்குறிப்பு: பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் துறை சார்பில் சீர்மரபினர் நலவாரிய உறுப்பினராக பதிவு செய்தவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இவ்வாரியத்தில் பதிவு பெற்ற உறுப்பினருக்கு விபத்து ஈட்டுறுதி திட்டத்தின் கீழ் உதவித்தொகை, இயற்கை மரணம், ஈமச்சடங்கு, கல்வி, திருமணம், மகப்பேறு, மூக்குக் கண்ணாடி உதவி தொகை, முதியோர் ஓய்வூதியம் ஆகிய நலத்திட்ட உதவிகள் செய்யப்படுகிறது.
அமைப்பு சாரா நிறுவனங்களில் பணிபுரியாத குடும்பத்தில் ஒருவர் இவ்வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்து நலத்திட்ட உதவிகள் பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஏற்கனவே உறுப்பினராக பதிவு செய்தோர்கள் தங்கள் உறுப்பினர் பதிவினை விரைவில் புதுப்பித்துக்கொள்ள பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் அலுவலரை தொடர்பு கொள்ளலாம், என்றார்.