ADDED : மார் 03, 2025 06:35 AM
காரியாபட்டி : காரியாபட்டி கணக்கனேந்தல், ஆத்திகுளம் மக்கள் வெளியூர்களுக்கு செல்ல குண்டாற்றை கடந்து செல்ல வேண்டும். மேடும் பள்ளமாக இருந்ததால் வாகனங்கள் சென்றுவர முடியவில்லை. ஆற்றில் தண்ணீர் வந்தால் பல கி.மீ., தூரம் சுற்றிச் செல்ல வேண்டிய நிலை இருந்து வந்தது. குண்டாற்றின் குறுக்கே மேம்பாலம் அமைத்தால் ஜோகில்பட்டி வழியாக கல்குறிச்சிக்கு எளிதாக செல்ல முடியும்.
குண்டாற்றின் குறுக்கே பாலம் கட்ட வேண்டி நீண்ட நாட்களாக வலியுறுத்தி வந்தனர். இதையடுத்து ஊரக வளர்ச்சித் துறை சார்பில் ரூ. 8 கோடியே 6 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. நேற்று முன்தினம் அமைச்சர் தங்கம் தென்னரசு குண்டாற்றின் குறுக்கே மேம்பாலம் அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார். நீண்ட நாள் கனவு நிறைவேறியதையடுத்து அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.