/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
இலவச இருதய மருத்துவ முகாம் 34 குழந்தைகளுக்கு உயர் சிகிச்சை
/
இலவச இருதய மருத்துவ முகாம் 34 குழந்தைகளுக்கு உயர் சிகிச்சை
இலவச இருதய மருத்துவ முகாம் 34 குழந்தைகளுக்கு உயர் சிகிச்சை
இலவச இருதய மருத்துவ முகாம் 34 குழந்தைகளுக்கு உயர் சிகிச்சை
ADDED : மே 26, 2024 03:39 AM
விருதுநகர்: -விருதுநகர் அரசு மருத்துவக்கல்லுாரி, மருத்துவமனையில் பொது சுகாதாரம், நோய்த்தடுப்பு மருந்துத்துறை, ஏகம் அறக்கட்டளை, கோவை ஜி.குப்புசாமி நாயுடு நினைவு மருத்துவமனை சார்பில் இலவச இருதய மருத்துவ முகாம் நடந்தது. கலெக்டர் ஜெயசீலன், டீன் சீதாலட்சுமி, கல்லுாரி துணை முதல்வர் அனிதா, மாவட்ட சுகாதார அலுவலர்கள் யசோதாமணி, கலுசிவலிங்கம், மருத்துவர்கள் கல்யாணசுந்தரம், விஜயக்குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.
விருதுநகர் சுகாதார மாவட்டத்தில் 60, சிவகாசி சுகாதார மாவட்டத்தில் 90 குழந்தைகள் தேசிய குழந்தைகள் நலவாழ்வு திட்டம் குழு மூலமாக அழைத்து வரப்பட்டனர். இவர்களுக்கு எக்கோ, ஸ்கேன் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 34 குழந்தைகளுக்கு கோவை ஜி. குப்புசாமி நாயுடு நினைவு மருத்துவமனையில் உயர் சிகிச்சை காப்பீட்டு திட்டத்தில் வழங்கப்படவுள்ளது.