ADDED : பிப் 24, 2025 03:57 AM
காரியாபட்டி : காரியாபட்டியில் லயன்ஸ் கிளப் ஆப் பெர்பெக்ட், போலீசார், மதுரை பாரதி இன்பினிட்டி மருத்துவமனை இணைந்து இலவச பொது மருத்துவ முகாம் நடத்தினர். இன்ஸ்பெக்டர் விஜய காண்டீபன் தலைமை வகித்தார்.
லயன்ஸ் கிளப் ஒருங்கிணைப்பாளர் கிருபா ராஜ்குமார், செயலாளர் விக்டர், பொருளாளர் ராமசாமி முன்னிலை வகித்தனர். தலைவர் அழகர்சாமி வரவேற்றார். அருப்புக்கோட்டை ஏ.எஸ்.பி., மதிவாணன் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்.
டாக்டர்கள் ராம் பிரசாத், திருமேனி உள்ளிட்ட மருத்துவ குழுவினர் ரத்தப் பரிசோதனை, நீரழிவு பரிசோதனை உள்ளிட்ட பரிசோதனைகள் செய்து மருந்து மாத்திரைகள் வழங்கினர். நூற்றுக்கும் மேற்பட்ட நோயாளிகள் பங்கேற்றனர். கிளப் நிர்வாகிகள் ஜெயப்பிரகாஷ், திருநாவுக்கரசு, பொன்ராம், முனீஸ்வரன் உட்பட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை மருத்துவமனை அலுவலர்கள் தினேஷ் பாபு, சிவராஜன் செய்திருந்தனர்.

