/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
வத்திராயிருப்பில் நண்பர்கள் தற்கொலை
/
வத்திராயிருப்பில் நண்பர்கள் தற்கொலை
ADDED : ஜூலை 09, 2024 10:31 PM

வத்திராயிருப்பு:விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு முடுக்கு தெருவை சேர்ந்தவர் தினேஷ், 26. குடிப்பழக்கத்திற்கு ஆளாகி திருநெல்வேலியில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். பின்னர் வயிற்று வலி ஏற்பட்ட நிலையிலும் தொடர்ந்து மது குடித்து வந்தார். பெற்றோர் அவரை கண்டித்தனர்.
இதனால், நேற்று முன் தினம் மாலை 5:30 மணிக்கு தன் வீட்டில் துாக்கிட்டு தினேஷ் தற்கொலை செய்து கொண்டார். அதே தெருவை சேர்ந்த தினேஷின் நண்பர் சந்தனம், 31; கூலித் தொழிலாளி. தினேஷ் தற்கொலை செய்த மன வருத்தத்தில் இருந்த அவர், அன்று இரவு 11:00 மணிக்கு வீட்டின் மாடியில் துாக்கிட்டு தற்கொலை செய்தார்.
வத்திராயிருப்பு போலீசார் விசாரிக்கின்றனர்.