/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
நின்ற ஆக்சிஜன் காஸ் லாரி மீது லோடு லாரி மோதியதில் காஸ் கசிவு
/
நின்ற ஆக்சிஜன் காஸ் லாரி மீது லோடு லாரி மோதியதில் காஸ் கசிவு
நின்ற ஆக்சிஜன் காஸ் லாரி மீது லோடு லாரி மோதியதில் காஸ் கசிவு
நின்ற ஆக்சிஜன் காஸ் லாரி மீது லோடு லாரி மோதியதில் காஸ் கசிவு
ADDED : மார் 11, 2025 12:19 AM

அருப்புக்கோட்டை; விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே நின்றிருந்த ஆக்சிஜன் காஸ் ஏற்றி வந்த லாரி மீது பனை ஓலைகளை ஏற்றி வந்த லாரி மோதியதில் காஸ் கசிவு ஏற்பட்டது.
தஞ்சாவூரில் இருந்து 16 டன் மெடிக்கல் காஸ் ஆக்சிஜன் ஏற்றப்பட்ட லாரி துாத்துக்குடி புறப்பட்டது. அருப்புக்கோட்டை அருகே கஞ்சநாயக்கன்பட்டி மதுரை துாத்துக்குடி நான்கு வழிச்சாலையில் ரோடு ஓரமாக நேற்று அதிகாலை 4:00 மணிக்கு நிறுத்தப்பட்டது.
லாரியை ஒட்டி வந்த நாமக்கல்லை சேர்ந்த ராதாகிருஷ்ணன், 60, லாரியில் துாங்கிக் கொண்டிருந்தார்.
மேற்கு வங்கத்தில் இருந்து துாத்துக்குடிக்கு வெளிநாடுகளுக்கு அலங்கார பொருட்களை ஏற்றுமதி செய்வதற்காக பனை ஓலை லோடு ஏற்றி வந்த லாரி நின்று கொண்டிருந்த டேங்கர் லாரி மீது மோதியது.
லாரியை திண்டுக்கல் சேர்ந்த செல்வம்,47, ஓட்டி வந்தார். யாருக்கும் காயமில்லை. லாரி மோதியதால் டேங்கர் லாரியின் வால்வு உடைந்து டேங்கரில் இருந்த காஸ் கசிந்தது.
இதனால் அந்தப் பகுதியில் செல்ல வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர். அருப்புக்கோட்டை தீயணைப்புத்துறையினர் ஆய்வு செய்து மெடிக்கல் காஸ் என்பதால் பாதிப்பு ஏற்படாது எனக்கூறினர்.
நேற்று இரவு 8:00 மணியையும் தாண்டி டேங்கரில் இருந்து காஸ் வெளியேறியதால் முழுவதும் வெளியேறும் வரை தீயணைப்பு துறையினர் பாதுகாப்பு பணியில் தயார் நிலையில் இருந்தனர்.