/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பெண் குழந்தை: முதிர்வு தொகை கிடைக்கலையா
/
பெண் குழந்தை: முதிர்வு தொகை கிடைக்கலையா
ADDED : ஜூன் 22, 2024 04:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: கலெக்டர் ஜெயசீலன் செய்திக்குறிப்பு: முதல்வரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் கீழ் பதிவு செய்து 18 வயது நிரம்பிய முதிர்வு தொகை கிடைக்காத பயனாளிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
வைப்பு நிதிப்பத்திரம், 10ம் வகுப்பு மதிப்பெண் சான்று, பயனாளியின் வங்கிக்கணக்கு புத்தகம், பயனாளியின் வண்ணப் புகைப்படம் ஆகிய ஆவணங்களோடு சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் உள்ள சமூகநல விரிவாக்க அலுவலர்களிடம் முதிர்வுத் தொகைக்கான ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும், என்றார்.