/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பாதாள சாக்கடை பணி துவங்கும் நிலையில் புதிய ரோடு பணியால் வீணாகும் அரசு நிதி
/
பாதாள சாக்கடை பணி துவங்கும் நிலையில் புதிய ரோடு பணியால் வீணாகும் அரசு நிதி
பாதாள சாக்கடை பணி துவங்கும் நிலையில் புதிய ரோடு பணியால் வீணாகும் அரசு நிதி
பாதாள சாக்கடை பணி துவங்கும் நிலையில் புதிய ரோடு பணியால் வீணாகும் அரசு நிதி
ADDED : ஜூலை 05, 2024 04:12 AM
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டையில் பாதாள சாக்கடை பணிகள்துவங்கும் நிலையில் மற்றொரு பகுதியில் புதிய ரோடுகளை போட்டு நிதிகளை வீணடிக்கின்றனர்.
அருப்புக்கோட்டையில் பாதாள சாக்கடை திட்டம் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு அமைச்சர் நேரு துவக்கி வைத்தார். முதற்கட்டமாக நெசவாளர் காலனி, ஜோதிபுரம் பகுதியில் திட்டம் செயல்படஉள்ளது. இதற்கான பணிகள் நடந்து வருகிறது.
இந்நிலையில், புதிய தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டத்திற்காக ஆங்காங்குபகிர்மான குழாய் அமைக்கும் பணிகளும் நடந்து வருகிறது.
இந்நிலையில் ரயில்வே பீடர் ரோடு, மாணிக்கம் நகர், மீனாம்பிகை நகர், ரயில்வே பீடர் ரோடு மேற்கு பகுதி உட்பட பகுதிகளில் தார் ரோடு அமைக்கும் பணி நடந்து வருகிறது.
நகரில் முக்கியமான ரோடுகள் பல ஆண்டுகளாக சேதம் அடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இது போன்ற முக்கியமான ரோடுகளை புதியதாக அமைக்க மக்களும், நகராட்சி கூட்டத்தில்கவுன்சிலர்களும் வலியுறுத்தி போது, பாதாள சாக்கடை திட்டம் நகரில் அமுலில் உள்ளதால் புதிய ரோடுகள் அமைக்க அரசு நிதி ஒதுக்கவில்லை என்ற காரணம் கூறப்பட்டது.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக நகரில் ஒரு சில பகுதிகளில் புதிய ரோடுகளை அமைத்து வருகின்றனர். பாதாள சாக்கடை பணிகள் இந்த பகுதியில் செய்யும் போது புதிய ரோட்டை பெயர்த்து எடுக்க வேண்டும். இதனால் லட்சக்கணக்கில் செலவழிக்கப்பட்ட அரசு நிதி வீணடிக்கப்படும்.
அவசர கதியில் அமைக்கப்படும் இந்த ரோடுகள் அமைக்க மட்டும் நிதி எங்கிருந்து வந்தது என மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
பாதாள சாக்கடை திட்ட பணிகள் முடிவடைந்த பின் புதிய ரோடுகள் அமைக்க நகராட்சிக்கு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்த வேண்டும்.