/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
அரசு மருத்துவமனை பேட்டரி கார் பழுதால் நோயாளிகள் அவதி
/
அரசு மருத்துவமனை பேட்டரி கார் பழுதால் நோயாளிகள் அவதி
அரசு மருத்துவமனை பேட்டரி கார் பழுதால் நோயாளிகள் அவதி
அரசு மருத்துவமனை பேட்டரி கார் பழுதால் நோயாளிகள் அவதி
ADDED : செப் 13, 2024 04:52 AM

விருதுநகர்: விருதுநகர் அரசு மருத்துவமனையில் பேட்டரி கார் பழுதாகி பல மாதங்களாகிறது. இதை சரி செய்யாமல் இருப்பதால் நோயாளிகளின் தேவையை பூர்த்தி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் அரசு மருத்துவமனையில் உள்நோயாளிகளாக இருப்பவர்கள், வயதானவர்கள், கர்ப்பிணிகளை வளாகத்திற்குள் அழைத்து செல்வதற்காக மூன்று பேட்டரி கார்கள் செயல்பட்டது.
இதில் ஒரு பேட்டரி காரில் பழுது ஏற்பட்டதால் இயக்க முடியாமல் பார்க்கிங் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டது.
பல மாதங்களாகியும் இதுவரை பழுது சரி செய்யப்படவில்லை. இதனால் நோயாளிகள், முடியாதவர்களை இடமாற்றம் செய்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
செயல்பாட்டில் உள்ள பேட்டரி கார்களிலும் சில நேரத்தில் ஒப்பந்த ஊழியர்கள் சென்று வருகின்றனர். எனவே பழுதான பேட்டரி காரை மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.