/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
அரசு கல்லுாரியில் சேர்க்கை கலந்தாய்வு
/
அரசு கல்லுாரியில் சேர்க்கை கலந்தாய்வு
ADDED : மே 30, 2024 02:06 AM
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் அரசு கலைக் கல்லுாரியின் முதல்வர் சரவணன் செய்தி குறிப்பு:
2024 - -25ம் கல்வி ஆண்டிற்கான முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை கலந்தாய்வு இன்று (மே 30) சிறப்பு ஒதுக்கீட்டுக்கான விளையாட்டு, முன்னாள் ராணுவ வீரர், பாதுகாப்பு படை வீரர் வாரிசுகள், அந்தமான் நிக்கோபார் தமிழ் வழி மாணவர்கள், என்.சி.சி. மாணவர்களுக்கு நடக்கிறது.
ஜூன் 10ல் கணிதம், கணினி அறிவியல் பாடங்களுக்கும், ஜூன் 11ல் வணிகவியல் பாடத்திற்கும், ஜூன் 12ல் தமிழ், ஆங்கில பாடங்களுக்கும் கலந்தாய்வு நடக்கிறது.
விண்ணப்பித்த மாணவர்களுக்கு கல்லுாரி சார்பில் மெயில், அலைபேசி வாயிலாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை பயன்படுத்தி தங்களது சேர்க்கையை உறுதி செய்து கொள்ள வேண்டும், என தெரிவித்துள்ளார்.