ADDED : ஜூலை 07, 2024 01:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: விருதுநகர் மாவட்ட நிர்வாகம் சார்பில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் அரசு பள்ளி மாணவர்களின் அறிவியல் களப்பயணத்தை கலெக்டர்ஜெயசீலன் கொடியசைத்து துவங்கி வைத்தார்.
விருதுநகர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று மாவட்ட நிர்வாகம் சார்பில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் திருவனந்தபுரத்தில்உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி ஆய்வு மையத்திற்கு 50 மாணவர்களும், கீழடி அகழ்வாராய்ச்சி, மதுரை நுாற்றாண்டு நுாலகம், திருமலை நாயக்கர் மஹாலுக்கு நுாறு மாணவர்களும், பந்தல்குடி சுற்றுச்சூழல் பூங்கா, துாத்துக்குடி ஸ்டெம் பார்க், துறைமுகத்திற்கு 100 மாணவர்களும் செல்லும் அறிவியல் களப்பயணத்தை கலெக்டர் ஜெயசீலன் கொடியசைத்து துவங்கினார். மொத்தம் 250 மாணவர்கள் 5 சுற்றுலா பஸ்களில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.