/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
அறுந்து கிடந்த மின்சார கம்பியை மிதித்த பேரன் பலி: பாட்டி காயம்
/
அறுந்து கிடந்த மின்சார கம்பியை மிதித்த பேரன் பலி: பாட்டி காயம்
அறுந்து கிடந்த மின்சார கம்பியை மிதித்த பேரன் பலி: பாட்டி காயம்
அறுந்து கிடந்த மின்சார கம்பியை மிதித்த பேரன் பலி: பாட்டி காயம்
ADDED : ஜூன் 06, 2024 05:32 AM
அருப்புக்கோட்டை, அருப்புக்கோட்டை அருகே அறுந்து கிடந்த மின்சார கம்பியை மிதித்ததில் சூரிய முனியராஜ் 19, அவனது பாட்டி பழனியம்மாள் 62, காயம் அடைந்தார்.
அருப்புக்கோட்டை அருகே மறவர் பெருங்குடியை சேர்ந்தவர் பட்லம்மாள், 47, இவருடைய மகன் சூரிய முனியராஜ், 19, விருதுநகர் சூலக்கரையில் உள்ள அரசு கேட்டரிங் கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வந்தார். விடுமுறையில் வீட்டுக்கு வந்துள்ளார். நேற்று முன் தினம் அதிகாலை ஊரிலுள்ள ஒரு தோட்டத்திற்கு சென்றுள்ளார். சென்றவர் வெகு நேரமாக வீடு திரும்பவில்லை.
இவரது பாட்டி பழனியம்மாள், 62, தேடி பார்க்க வந்து அவரும் வீட்டிற்கு வரவில்லை. இருவரையும் தேடி பட்லம்மாள் சென்ற போது, காட்டிற்கு அருகில் மகன் மீது மின்சார கம்பி அறுந்து விழுந்து கிடந்துள்ளது. அருகில் இவரது தாய் மயங்கிய நிலையில் இருந்துள்ளார். உடன் ஊர் மக்களிடம் சொல்லி மின்சார கம்பியை அப்புறப்படுத்திய போது, சூரிய முனியராஜ் இறந்தது தெரிய வந்தது.
மயக்க நிலையில் இருந்த தாயை அருப்புக் கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்து பின்னர் விசாரித்த போது, மின்சார கம்பியை மிதித்து விழுந்து கிடந்த பேரனை காப்பாற்ற அவனைத் தொட்ட போது தூக்கி எறியப்பட்டு மயங்கியதாக கூறியுள்ளார். இதுகுறித்து எம். ரெட்டியபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.-