/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பனை விதை நடவு, குறுங்காடு அமைக்கும் பசுமை ஆர்வலர்கள் உடையனாம்பட்டியில் சாதனை
/
பனை விதை நடவு, குறுங்காடு அமைக்கும் பசுமை ஆர்வலர்கள் உடையனாம்பட்டியில் சாதனை
பனை விதை நடவு, குறுங்காடு அமைக்கும் பசுமை ஆர்வலர்கள் உடையனாம்பட்டியில் சாதனை
பனை விதை நடவு, குறுங்காடு அமைக்கும் பசுமை ஆர்வலர்கள் உடையனாம்பட்டியில் சாதனை
ADDED : மார் 03, 2025 07:16 AM

மற்றவர்களுக்கு உதவுவது, மக்களுக்கு பயனுள்ள வகையில் ஏதாவது செய்வது என பலருக்கு ஆர்வம் இருக்கும். அவ்வாறு செய்யும்போது அதில் கிடைக்கும் மகிழ்ச்சிக்கு அளவே இருக்காது. அப்படிப்பட்ட உதவும் மனம், குணம் ஒரு சிலருக்கு மட்டுமே இருக்கும்.
சிலர் எதிர்கால சந்ததியினருக்கு ஏதாவது ஒரு வகையில் உருவாக்க வேண்டும் என்கிற எண்ணம் இருக்கும். சிலர் செய்யும் செயல்பாடுகள் வெளி உலகத்திற்கு தெரியாது. அதுபோன்றவர்களை வெளியில் கொண்டு வரும் பொழுது தான் அதைக் கண்டு மற்றவர்களும் ஏதாவது செய்ய வேண்டும் என்கிற எண்ணம் ஏற்படும்.
அவ்வாறு காரியாபட்டியைச் சேர்ந்த ஆசிரியர் பொன்ராம், பசுமை பாரத இயக்கம் துவங்கி, தனது சம்பளத்தில் ஒரு பகுதியை மரக்கன்றுகளை வாங்கி பல்வேறு இடங்களில் நட்டு வருகிறார். பெரும்பாலான இடங்களில் மரங்களாக வளர்ந்து நிழல் தரும்போது அவருக்கு அளவில்லாத மகிழ்ச்சி ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து, எதிர்கால சந்ததியினருக்கு பலன் கொடுக்கும் வகையில் பனை விதைகளை நட எண்ணினார். குறிப்பாக உடையனாம்பட்டி ஊராட்சி நிர்வாகம், தலைமை ஆசிரியர் ஒத்துழைப்புடன் அங்குள்ள பள்ளியில் தேக்கு, வேம்பு, புங்கை, பூவரசு, மூலிகை செடிகள் என குறுங்காடு ஏற்படுத்தி சாதனை படைத்தனர். இதைத்தொடர்ந்து 100 நாள் வேலைத்திட்டத்தின் மூலம் அங்குள்ள கண்மாய், ஊருணி கரைகளில் பனை விதைகளை நட்டனர். வேலி அமைத்து பாதுகாத்து, பக்குவமாக வளர்த்து வருகின்றனர்.