டி.என்.பி.எஸ்.சி., குரூப் 1 தேர்வு/DC 1549 பேர் ஆப்சென்ட்
டி.என்.பி.எஸ்.சி., குரூப் 1 தேர்வு/DC 1549 பேர் ஆப்சென்ட்
ADDED : செப் 27, 2026 05:31 PM
விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் 13 மையங்களில் நடந்த டி.என்.பி.எஸ்.சி., குரூப் 1 முதல்நிலை தேர்வை 4675 பேர் எழுதினர். இதில் 1549 பேர் ஆப்சென்ட் ஆகினர்.
மாவட்டத்தில் அரசு பணியாளர் தேர்வாணையத்தால் (டி.என்.பி.எஸ்.சி.,) நடத்தப்பட்ட குரூப் 1 தேர்விற்கு 6244 பேர் விண்ணப்பத்திருந்தனர். விருதுநகர் செந்திக்குமார நாடார் கல்லுாரியில் 900 பேர், நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி 200 பேர், ஸ்ரீ வித்யா பொறியியல், தொழில்நுட்பக் கல்லுாரி 300 பேர், ஏ.ஏ.ஏ., பொறியியல், தொழில்நுட்ப கல்லுாரி 500 பேர், ஹாஜி பி.சையத் முகமது மேல்நிலைப்பள்ளி 200 பேர், கே.வி.எஸ்., மேல்நிலைப்பள்ளி 1000 பேர், வே.வ.வன்னியப்பெருமாள் பெண்கள் கல்லுாரி 600 பேர், வெள்ளைச்சாமி நாடார் பாலிடெக்னிக் கல்லுாரி 600 பேர், ஷத்திரிய பெண்கள் மேல்நிலைப்பள்ளி 380 பேர், ஷத்திரிய வித்யாசாலா ஆங்கிலப்பள்ளி 380 பேர், அண்ணாமலையம்மாள் பள்ளி 380 பேர், சுப்பையா நாடார் அரசு மேல்நிலைப்பள்ளி 200 பேர், ராம்கோ வித்யாலயா பள்ளியில் 584 என மொத்தம் 6224 பேருக்கு தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருந்தது.
நேற்று நடந்த முதல்நிலை தேர்வை 4675 பேர் எழுதினர். இதில் 1549 பேர் ஆப்சென்ட் ஆகினர்.
