தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ பள்ளிக்கு ஆர்.ஓ., பிளான்ட் வழங்கல் /DC

பள்ளிக்கு ஆர்.ஓ., பிளான்ட் வழங்கல் /DC

பள்ளிக்கு ஆர்.ஓ., பிளான்ட் வழங்கல் /DC


ADDED : செப் 27, 2026 05:42 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 27, 2026 05:42 PM


Follow on Google
அ நிறம் | அளவு

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் அ.முக்குளம் அரசு மேல்நிலையில் 1976 முதல் 1993 வரை படித்த முன்னாள் மாணவர்கள் இணைந்து தமிழாசிரியராக பணியாற்றி மறைந்த சடாச்சரம் நினைவாக பள்ளி மாணவர்களின் குடிநீர் தேவைக்காக ரூ. 2 லட்சத்தில் ஆர்.ஓ., பிளாண்ட் வழங்கினார்.

இதில் பள்ளி முன்னாள் ஆசிரியர்  பெரியசாமி தலைமை வகித்தார். முன்னாள் மாணவர் கருப்புசாமி வரவேற்றார் முன்னாள் மாணவர் குருசாமி ஆர்.ஓ., பிளாண்ட்டை துவக்கி வைத்தார்.

மேலும் பள்ளியில் மின்விசிறிகள், வளாகத்தில் மரக்கன்றுகளை 1985 பிரிவு மாணவர் கிருஷ்ணன் வழங்கினார். சிறப்பு விருந்தினராக எஸ்.ஐ., அஜீத்குமார் பங்கேற்றார். சிவஞானம் வாழ்த்துரை வழங்கினார்.

ஓய்வு பெற்ற முன்னாள் தலைமை ஆசிரியர் பாலகிருஷ்ணன், தமிழாசிரியர் கருப்பையா ஆகியோர் பேசிய வாழ்த்து செய்தி ஒலிபரப்பப்பட்டது.

ஏற்பாடுகளை முன்னாள் மாணவர்கள் அழகர்சாமி, முத்திருளன்,  சோமசுந்தரம், ராஜேந்திரன், ஆறுமுகம், முருகேசன், அழகப்பன், குமாரசாமி செய்தனர். ஆசிரியர் பொன்னுச்சாமி நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us