ADDED : ஜூன் 19, 2024 05:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர் : விருதுநகர் அருகே மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த அஜீத், மனைவி மகாலட்சுமி. நிறை மாத கர்ப்பிணியான இவருக்கு நேற்று மாலை 4:30 மணிக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இவரை 108 ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் போது வலி அதிகமானதால் மருளுத்து அருகே ஒரமாக நிறுத்தினர்.
மருத்துவ உதவியாளர் ராஜலட்சுமி பிரசவம் பார்த்ததில் பெண் குழந்தை பிறந்தது. இவருக்கு டிரைவர் திருமலைக் கண்ணன் உதவி புரிந்தார். அதன் பின் தாய், சேய் இருவரையும் அழகாபுரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதித்தனர்.