ADDED : ஏப் 07, 2024 06:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகாசி, : சிவகாசி அருகே சித்துராஜபுரம் பகுதியில் டவுன் எஸ்.ஐ., அய்யனார் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது வந்த காரை நிறுத்தி சோதனை செய்கையில், உள்ளே அரசால் தடை செய்யப்பட்ட ரூ. 36 ஆயிரத்து 592 மதிப்பிலான தடை புகையிலை பொருட்கள் இருந்தது தெரியவந்தது. காரில் வந்த சித்துராஜபுரம் கருப்பசாமி கோயில் தெரு சுரேந்திரபாபு 35, பாரதியார் தெரு முருகன் 24, ஆகியோரை போலீசார் கைது செய்து, தடை புகையிலை பொருட்கள், காரை பறிமுதல் செய்தனர்.

