ADDED : ஏப் 02, 2024 06:43 AM

விருதுநகர்: விருதுநகர் காமராஜ் பொறியியல் கல்லுாரியில் கணினியியல் துறை சார்பில் 10 நாட்கள் ஹேக்கத்தான் நிகழ்வு நடந்தது.
பெங்களூருவை சேர்ந்த குவார்செக் மென்பொருள் நிறுவனம் மாணவர்களுக்கு மென்பொருள் மேம்படுத்தல் சவால்களை முன்வைத்தனர்.
10 நாட்களுக்கு தொடர்ச்சியாக முயன்று கோடிங் மூலம் மென்பொருள் சவால்களுக்கு செயல்முறை தீர்வுகளை கண்டறிந்தனர். இதை தொடர்ந்து ஹேக்கத்தான் இறுதி நாளில் சிறப்பான மென்பொருள் தீர்வுகளை கண்டறிந்த மாணவர்களுக்கு காசோலைகளும், சான்றுகளும் வழங்கப்பட்டன. இந்நிகழ்வின் நிறைவு விழாவில் காமராஜ் கல்லுாரி முதல்வர் செந்தில் வரவேற்றார். செயலாளர் தர்மராஜன் வாழ்த்தினார். கல்லுாரி துணை செயலாளர் பாலகிருஷ்ணன் வெற்றி பெற்ற மாணவர்களை பாராட்டினார்.
குவார்செக் மென்பொருள் நிறுவன தலைமை நிர்வாகி தினேஷ் ஆறுமுகம் பேசினார். கணிணியியல் துறை தலைவர் மீனாட்சி நன்றிக் கூறினார்.

