/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
காரியாபட்டியில் ஆலங்கட்டி மழை மரம் சாய்ந்து மின்கம்பம், கார் சேதம்
/
காரியாபட்டியில் ஆலங்கட்டி மழை மரம் சாய்ந்து மின்கம்பம், கார் சேதம்
காரியாபட்டியில் ஆலங்கட்டி மழை மரம் சாய்ந்து மின்கம்பம், கார் சேதம்
காரியாபட்டியில் ஆலங்கட்டி மழை மரம் சாய்ந்து மின்கம்பம், கார் சேதம்
ADDED : ஆக 07, 2024 07:36 AM
காரியாபட்டி : காரியாபட்டியில் இடி, மின்னல், பலத்த காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்தது. மரம் சாய்ந்ததில் மின் கம்பம் உடைந்து, காரில் விழுந்ததில் சேதம் ஏற்பட்டது.
காரியாபட்டி மற்றும் சுற்றியுள்ள பகுதியில் கடந்த சில தினங்களாக வெயில் வாட்டி வதைத்தது. வெளியில் மக்கள் தலை காட்ட முடியவில்லை.
அனல் தாக்கியது. இந்நிலையில் நேற்று மாலை திடீரென வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. சிறிது நேரத்தில் இடி, மின்னல், பலத்த காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்தது.
பள்ளத்துப்பட்டி ரோட்டில் உள்ள அரசு துவக்கப்பள்ளி வளாகத்தில் இருந்த மரம் முறிந்து, மின்கம்பத்தில் விழுந்தது. மின் கம்பம் சாய்ந்து ஒயர்கள் தாழ்வாக உள்ளன. மின்சாரம் துண்டிக்கப்பட்டது. அங்கு நிறுத்தப்பட்டிருந்த கார் மீது மரம் விழுந்ததில் சேதம் அடைந்தது. உடனடியாக மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பாதிப்பு எதுவும் இல்லை. அனலில் தவித்த மக்களுக்கு குளிர்ந்த சீதோஷ்ண நிலை ஏற்பட்டதால் மகிழ்ச்சி அடைந்தனர். ஒரு மணி நேரம் மழை பெய்தது.