நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை திருச்சுழி ரோட்டில் உள்ள ரத்தினம் செவிலியர் கல்லுாரியில், தமிழ்நாடு செவிலியர் கழகம் சார்பாக கூந்தல் தானம் வழங்கும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களைச் சேர்ந்த 9 செவிலியர் கல்லூரி மாணவிகள், ஆசிரியைகள் கூந்தல் தானம் செய்தனர். ஜீவரத்தினம் அறக்கட்டளை சார்பாக நடந்த இந்த நிகழ்ச்சிக்கு கல்லுாரி துணைத் தலைவர் டாக்டர் சிந்துரேகா தலைமை வகித்தார். கல்லுாரி முதல்வர் ஹேமாவதி வரவேற்றார். ஏற்பாடுகளை ரத்தினம் செவிலியர் கல்லுாரி முதல்வர் டாக்டர் தாமரைச்செல்வி, ஆசிரியைகள் செய்தனர்.