நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வத்திராயிருப்பு, : வத்திராயிருப்பில் பைபாஸ் ரோடு திட்டத்தை விரைந்து செயல்படுத்துதல், அரசு மருத்துவமனையை தரம் உயர்த்துதல், வருஷநாடு தேனி மலை பாதை திட்டத்தை துவங்குதல் உட்பட பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை விரைந்து செயல்படுத்த கோரி அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் சார்பில் கையெழுத்து இயக்கம் நடந்தது.
தாலுகா செயலாளர் தினேஷ் குமார் தலைமை வகித்தார். இளைஞர் பெருமன்ற மாவட்ட செயலாளர் பகத்சிங் துவக்கி வைத்தார். முன்னாள் எம்.எல்.ஏ. ராமசாமி, முன்னாள் எம்.பி. லிங்கம், தாலுகா செயலாளர் கோவிந்தன், பேரூராட்சி தலைவர் தவமணி மற்றும் நிர்வாகிகள் கையெழுத்து இயக்கத்தை துவக்கி வைத்து பேசினார். நிர்வாகிகள் பங்கேற்றனர்.

