/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
விருதுநகர், நரிக்குடியில் மின்னலுடன் கொட்டித்தீர்த்த மழை
/
விருதுநகர், நரிக்குடியில் மின்னலுடன் கொட்டித்தீர்த்த மழை
விருதுநகர், நரிக்குடியில் மின்னலுடன் கொட்டித்தீர்த்த மழை
விருதுநகர், நரிக்குடியில் மின்னலுடன் கொட்டித்தீர்த்த மழை
ADDED : ஆக 08, 2024 04:20 AM

விருதுநகர்: விருதுநகர், நரிக்குடியில் நேற்று மாலை இடி, மின்னலுடன் கனமழை கொட்டி தீர்த்தது.
விருதுநகரில் காலை முதலே வெயிலின் தாக்கம் அதிகம் காணப்பட்டது. வெப்ப சலன வெயிலாக இருந்ததால் மக்களால் நடமாட முடியவில்லை. நேற்று மாலை 5:20 மணி முதல் 7:00 மணி வரை கனமழை கொட்டி தீர்த்தது. உள்ளூர் விடுமுறை என்பதால் மாலை நேரங்களில் பள்ளி மாணவர்களுக்கு சிரமமில்லை. இருப்பினும் வியாபாரிகள், மக்கள் கடும் சிரமத்தை சந்தித்தனர். அனைத்து வடிகால்களிலும் பெருக்கெடுத்து மழைநீர் ஓடியது. மதுரை ரோடு உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் தேங்கி பின் வடிந்தது. இதே போல் நரிக்குடி பகுதியில் மாலை 4:00 மணி முதலே கனமழை கொட்டி தீர்த்தது. நீர்நிலைகள், வரத்து ஓடைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
அருப்புக்கோட்டையில் மாலை 6:10 முதல் கால் மணி நேரம் மட்டும் மழை பெய்தது. அதற்கு பின் சாரல் பெய்தது. சாத்துாரில் மதியம் 3:00 மணி முதல் மாலை 4:30 வரை கனமழையும், அதை தொடர்ந்து சாரல் மழையும் பெய்தது. பஸ் ஸ்டாண்ட், முக்கிய வீதிகளில் மழைநீர் தேங்கி நீண்ட நேரம் கழித்து வடிந்தது. ஸ்ரீவில்லிபுத்துார், ராஜபாளையம் பகுதிகளில் காலை முதலே வெயிலின் தாக்கம் அதிகமாக மட்டுமே இருந்தது. மாலை நேரங்களில் மேகமூட்டம் மட்டும் காணப்பட்டது.